இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடந்து முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் 90-களின் கனவு கன்னியான சிம்ரன் நடனம் ஆடியுள்ளார். விஜய் - சிம்ரன் இந்த ஜோடி இன்றும் பலரது பேவரைட்டாக உள்ளது. இந்நிலையில் நடனத்துக்கு பின்பு பேசிய சிம்ரன் " விஜய் உடன் துள்ளாத மனமும் துள்ளும் நடித்து 21 ஆண்டுகள் ஆகிறது. ப்ரியமானவளே நடித்து 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் எனக்கு விஜய் தான் சிறந்த திரையுலக ஜோடி.. அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடன அமைப்பாளர் சாண்டியின் நடனம் இருந்தது. விஜய் சேதுபதி குரலில் பாடப்பட்ட குட்டி ஸ்டோரி பாடலுக்கு அவர் நடனமாடியது எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது.
அதன் பிறகு எல்லாவற்றுக்கும் மேலாக தளபதி விஜய், அனிருத் மற்றும் சாந்தனு உடன் இணைந்து 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆடிய நடனம் வேற லெவல் வகையறா. ஆக மொத்தம் இந்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் தளபதி ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா..!