நடிகர் சுஷாந்த் சிங் மரணம்... மரியாதை செலுத்தும் விதத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் அறிவிப்பு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் Common DP-யை உருவாக்கி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இளம் நடிகரின் திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே அவர்கள் தளபதி விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் "இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களின் திடீர் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் DP-யை நாங்கள் கைவிடுகிறோம். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் சார்" என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் மரணம் விஜய் ரசிகர்கள் மரியாதை Thalapathy vijay fans pay respect to Sushant singh demise

People looking for online information on Sushant Singh Rajput, Thalapathy, Vijay will find this news story useful.