நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலான ‘பீஸ்ட்’ படத்தில் செம்ம பிஸியாக இருக்கிறார்.

‘தளபதி’ விஜயின் 65வது திரைப்படமான இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அன்பறிவ் சண்டைப் பயிற்சியை அளிக்க, ஜானி மாஸ்டர் நடன பயிற்சியை அளிக்கிறார்.
இதேபோல், நடிகர் கார்த்தி, ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில், பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்துக்கான படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோவில் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த படப்பிடிப்புக்கு அருகில் தான் விஜய் நடிக்கும், ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளமும் இருந்துள்ளதாம்.
அப்படியிருக்க ‘தளபதி’ விஜயை சந்திக்க, ஒரு இடைவேளையில் நடிகர் கார்த்தி சென்று சந்திக்க, ‘தளபதி’ விஜய், கார்த்தியை ‘சர்தார்’ பட கேரக்டரின் கெட்டப்பில் அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லையாம். அதன் பின்னர் கார்த்தி, தான் தான் என்று விளக்கிய பிறகே, “அட நீயா தம்பி” என்பது போல், கார்த்தியை அடையாளம் கண்டு, தளபதி விஜய் கட்டிப் பிடித்து, “கெட்டப் நல்லாருக்கு” என வாழ்த்து கூறியுள்ளாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த ஸ்வாரஸ்யத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் நடிகர் கார்த்தி இருவரின் இந்த 2 படங்களுக்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.