BREAKING: "வாரிசு படத்தில் விஜய்யோட பேரு இது தானா??.." அதிரடி 'UPDATE'.. "கூடவே இன்னொரு சர்ப்ரைஸும்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | Parampara season 2 : டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் விறுவிறுப்பான தொடர்.. ‘பரம்பரா சீசன் 2’

இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த பீஸ்ட் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தற்போது விஜய் நடித்து வரும் அவரது 66 ஆவது திரைப்படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கி வருகிறார். மேலும் வாரிசு திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தன்னா முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, சங்கீதா, ஷ்யாம், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது.

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணி உள்ளது. அதே போல, இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே. சூர்யாவும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேகமாக தகவல் கிடைத்திருந்தன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளி வரவில்லை. நடிகர் விஜய் தான் வாரிசு பட இயக்குனரிடம், எஸ்.ஜே.சூர்யாவை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கும் முனைப்பை முன்னெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தில், நடிகர் விஜய்யின் பெயர் மற்றும் கதாபாத்திரம் குறித்து, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு படத்தில் 'Application Designer' கதாபாத்திரத்தில், விஜய் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், "விஜய் ராஜேந்திரன்" என்பது தான் அவரது பெயர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "சர்தார்" படத்துக்காக களமிறங்கிய கார்த்தி.. இயக்குனர் P.S.மித்ரன் வெளியிட்ட ஜாலியான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy vijay character name in vamsi driectorial varisu movie

People looking for online information on Thalapathy Vijay, Varisu Movie, Varisu Movie Vijay Character name, Vijay will find this news story useful.