"போடுறா வெடிய!".. "இது தளபதி தீபாவளி!".. வந்தாச்சு பீஸ்ட் வெடி.. தெறிக்கவிடும் VIRAL ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளி என்றாலே லட்சுமி வெடி, குருவி வெடி, பிஜிலி வெடி என பல விதமான பட்டாசுகள் பிரபலமாக இருக்கின்றன. அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் பட பெயரிலான வெடி இந்த தீபாவளிக்கு களம் இறங்கி இருப்பதாக செய்திகள் வைரலாகி வருகின்றன.

Thalapathy Vijay Beast Vedi becomes viral in this Diwali
Advertising
>
Advertising

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் புதிய திரைப்படம் Beast. தளபதி விஜய்யின் 65வது திரைப்படமான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

Thalapathy Vijay Beast Vedi becomes viral in this Diwali

இத்திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நடந்து வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சிங்கிள் உள்ளிட்ட அடுத்த அப்டேட்ஸ்களுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். முன்னதாக தளபதி விஜய், கைகளில் துப்பாக்கியுடன் நின்று போஸ் கொடுக்க கூடிய பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த தீபாவளிக்கு தளபதி விஜய் நடித்த திரைப்படமான பீஸ்ட் படத்தின் பெயரிலான புதிய வெடி சந்தைக்குள் களம் இறங்கியிருக்கிறது. அதன்படி, அந்த வெடிக்கு பீஸ்ட் வெடி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த வெடியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இந்த தீபாவளிக்கு பீஸ்ட் வெடி இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Thalapathy Vijay Beast Vedi becomes viral in this Diwali

People looking for online information on Beast Pattas, Beast Vedi, BeastDiwali, Thalapathy Diwali, Thalapathy Vijay Crackers, Thalapathy Vijay Vedi, ThalapathyVijay, ThalapathyVijay Pattas will find this news story useful.