பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாலயா? சென்னையிலயா? வெறித்தனமான MASS அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் (Beast) படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நான்கு கட்ட படப்பிடிப்புகள் ,முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் இடம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் பாக்கி உள்ளதாகவும், இந்த 20 நாள் படப்பிடிப்பும் சென்னையில் மட்டுமே நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy vijay Beast movie final schedule shooting update

People looking for online information on Beast, Nelson, Pooja Hegde, Vijay will find this news story useful.