பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு பிறகு மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள இரண்டாவது படம் கர்ணன்.
தனுஷ் நடிப்பிலான இந்த திரைப்படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்து கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் தேசிய விருது வாங்கியிருந்தது. அத்துடன் தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியிடப்பட்டது.
இந்த படத்தைக் காண முதல் நாள் முதல் ஷோவிலேயே ரசிகர்கள் பட்டாசு வெடித்து தாரை தப்பட்டைகள் முழங்க கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைப்பக்கங்களில் வலம் வருகின்றன. தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு அழகம்பெருமாள், நட்டி நட்ராஜ் மற்றும் பலர் நடித்து உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் கதைக்களம் 1997இல் நிகழ்கிறது. இந்த பட காட்சிகளில் தனுஷ் தளபதி ரஜினியின் ஸ்டில்ஸ் பதிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்து வருவதை காணமுடிகிறது. இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதையொட்டி பலரும் தளபதி திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும். அதுபோல தளபதி ரஜினி ஸ்டில் பதிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து, தனுஷ் கர்ணன் படத்தில் நடித்திருப்பது சுவாரசியமான ஒன்று என்று கூறிவருகின்றனர்.
இதனிடையே 1997 இல் கர்ணன் கதை நடப்பதால் அந்த காலக்கட்டத்தில் (1991) வெளியாகியிருந்த தளபதி திரைப்படத்தின் தாக்கம் நாயகனின் டி ஷர்ட்டில் எதிரொலித்திருப்பதாய் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் கருதுகிறார்கள்.
ALSO READ: Karnan (Tamil) Review - கர்ணன் திரை விமர்சனம்