Beast படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Also Read | "மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும்".. பிக்பாஸ் சொன்ன வாழ்த்து.. உடைந்து அழுத அசீம்..!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதனை அர்டுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் 67வது படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மிஷ்கின், நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தனியார் டிவி சேனல் ஒன்றில் இப்படம் குறித்து பேசியிருந்த இயக்குனர் மிஷ்கின், தளபதி 67 படத்தில், “லோகேஷ் கனகராஜ் மிகவும் துல்லியமாக படம் இயக்குகிறார். நடிப்பில் அவருக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக வாங்குகிறார். படம் நல்லா வந்துட்டு இருக்கு. அருமையான படக்குழுவோடு சேர்ந்து நான் வேலை பார்க்குறேன். மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.” என பேசியிருந்தார்.
இந்நிலையில், தளபதி 67 படத்தின் 2வது கட்டப்படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்குவதாகவும், இதில் விஜய் மற்றும் மிஷ்கின் பங்குபெறும் காம்பினேஷன் காட்சிகளுக்கான 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மற்ற நடிகர்கள் ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின் இணைவதாகவும், நீண்ட 30 நாட்கள் கொண்ட படப்பிடிப்பாக இந்த கொடைக்கான படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கென நடிகர் விஜய் மற்றும் மிஷ்கின் இருவரும் மதுரைக்கு ஒன்றாக ஒரே விமானத்தில் செல்வதாகவும் தெரிகிறது.
Also Read | எங்கே செல்லும் இந்த பாதை.. நினைவிழந்த நிலையில் பாரதி.. பாரதி கண்ணம்மா சீரியல் ட்விஸ்ட்!