விஜய் நடிக்கும் தளபதி 67 படம் LCU-வா?.. அறிவிப்பு போஸ்டர்ல இப்படி ஒன்னு இருக்கா?..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | THALAPATHY 67: இந்தா வந்துருச்சுல.. புதிய போஸ்டர் & அறிக்கையுடன் வெளியான தளபதி 67 படத்தின் அறிவிப்பு..! 

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

இந்நிலையில் இன்று தளபதி 67 படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். இந்த போஸ்டரை தலைகீழாக நோக்கும் போது எழுத்துக்கள் LCU போல இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

LCU என்பது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்பதன் சுருக்கமாகும். கைதி & விக்ரம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த தொடர்புகளின் அடிப்படையில் LCU அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை LCU-வில் நடிகர் கார்த்தி, கமல்ஹாசன், சூர்யா, நரேன், பஹத் பாசில், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இந்த முறை அணுகுண்டு வெடிப்பு".. தளபதி 67 படம் குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த அனிருத்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 67 Movie Announcement Poster Details

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67, Thalapathy 67 updates, Vijay will find this news story useful.