THALAPATHY66 : தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் புதிய படம்! ஷூட்டிங் எப்போ? எந்த GENRE தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 66 வது படம் பற்றிய முக்கிய தகவல் பிரத்யேகமாக நமது Behindwoods தளத்திற்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

பிரபல நடிகரும் விளையாட்டு வீரருமான பீம்பாய் பாய் பிரவீன் குமார் காலமானார்

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார்.

இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. கோவிட் லாக்டவுனுக்கு பிறகு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருந்தது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. ஊடகவியலாளர் சந்திப்பில், நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிபடுத்தினார். 

இந்த படத்தில் பணிபுரிவது பற்றி சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் சூசகமாக அறிவித்தார். அதே போல் எடிட்டராக பிரவீன் கே எல் பணிபுரிவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VALIMAI: மதுரை மாவட்டத்தில் சத்தமில்லாமல் செம சம்பவம் செய்த அஜித் நடிக்கும் வலிமை படம்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 66 to go on floors on 1st week of April. Family Drama

People looking for online information on Beast, Family Drama, Thalapathy66, Vijay, Vijay66 will find this news story useful.