''நேர்கொண்ட பார்வை'யில் இருந்து அது CONTINUE ஆகுது'' - 'தளபதி 64' பட இயக்குநர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்து கார்த்தி நடித்துள்ள படம் கைதி. மாநகரம் படத்துக்கு பிறகு இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கைதி படம் குறித்தும் தளபதி 64 படம் குறித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது  தளபதி விஜய்யின் ரசிகர்கள் காட்டும் அன்பு குறித்து பேசிய அவர், ''கண்டிப்பா ஒருத்தர நம்மள பிடிக்குதுனா, அதை வெளிப்படுத்துவதற்கு வார்த்தையில்ல.

பெரிய நடிகர்கள் கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் அதுவே போதும். நமக்கு சப்போர்ட்டிவா இருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

என் நண்பர்கள் எல்லோருமே ஸ்டார்ஸ்க்கான படங்கள் வச்சு இருக்காங்க. எப்போ எப்போனு காத்துட்டு இருக்காங்க. கார்த்தி மாதிரி நடிகர்கள் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவது திருப்புமுனையாக இருக்கிறது. பேட்ட படத்துல இருந்து அது தொடங்கியது. நேர்கொண்ட பார்வையில் இருந்து அது Continue ஆய்ட்டு இருக்கு'' என்றார். 

''நேர்கொண்ட பார்வை'யில் இருந்து அது CONTINUE ஆகுது'' - 'தளபதி 64' பட இயக்குநர் கருத்து வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 64 Director Lokesh Kanagaraj about Kaidhi, Petta, Nerkonda paarvai

People looking for online information on Kaidhi, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.