ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த தளபதி 63 பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தின் மற்றொரு நாயகியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வரும் ரெபா மோனிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மெக்கானிக்காக நடிக்கும் ஹரிஷ் கல்யாண் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள இளைஞராக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது மற்றொரு முக்கிய வேடத்தில் நடிகை ரெபா மோனிகா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. நடிகை ரெபா மோனிகா தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் மகளிர் கால்பந்து அணியில் ஒருவராக நடித்து வருகிறார்.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thalapathy 63 star Reba Monica joins Harish Kalyan's Dhanusu Raasi Neyargale

People looking for online information on Dhanusu Raasi Neyargale, Harish Kalyan, Reba Monica John, Rhea Chakraborty, Thalapathy 63 will find this news story useful.