இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக திரையரங்கில் வெளியாகும் படம் தலைவி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கங்கனகா ரனாவத் ஜெயலலிதாவையும், அரவிந்த் சுவாமி எம்ஜிஆரையும் பிரதிபலிக்குமாறான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் சமுத்திரகனி நடித்துள்ள கேரக்டர் மூத்த தலைவரும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் அவர்களை பிரதிபலிப்பதாய் கற்பனையாய் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் முன்னாள் முத்த அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இன்று தனது 95 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனை அடுத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, துரைமுருகன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி அனைவரும் ஆர்.எம். வீரப்பன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினர்.
சட்டமேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.