‘தலைவி’ படத்துக்காக ‘ரியல்’ தலைவிக்கு கங்கனா ரனாவத் மரியாதை... உருக்கமான தருணம்.. பரவும் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் குயீன் எனும் வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் ஒரு பேட்டியை மையமாக வைத்து அவரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் வெப் சீரிஸாக வெளியாகியது.

இந்நிலையில் தான் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருக்கும் ‘தலைவி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையொட்டி கங்கனா ரனாவத் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உருக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

அதன் பின்னர் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இன்று தலைவி படத்தின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 

Also Read: பிரபல ஓடிடி தளத்தில் மாஸாக வெளியான ப்ளாக் விடோ.. மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த பிரம்மாண்டம்!

‘தலைவி’ படத்துக்காக ‘ரியல்’ தலைவிக்கு கங்கனா ரனாவத் மரியாதை... உருக்கமான தருணம்.. பரவும் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thalaivi Kangana Ranaut at Jayalalitha memorial Chennai தலைவி

People looking for online information on ChiefMinister, Jayalalita, Jayalalitaa, Jayalalitha, Jayalalithaa, Kangana Ranaut, TNChiefMinister will find this news story useful.