நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'.

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு காரண கர்த்தாவாக விளங்கும் 'வலிமை' திரைப்படத்தை காண பல மில்லியன் பேர் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான மக்கள், ‘வலிமை’ திரைப்படத்தினை காண விருப்பம் தெரிவித்துள்ளதாக, கடந்த வார தகவல்களை காணமுடிந்தது. இதனிடையே இப்படத்தின் தயாரிப்பாளர் ‘போனி கபூர்’ கொரோனா மற்றும் சில காரணங்களால் இந்த பணிகள் தள்ளிப்போனதாக தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பின்னர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி, ‘வலிமை’ தொடர்பான நிறைவுப் பணிகள் தொடங்கப்படுவதாக அறிவித்து ரசிகர்களை நிம்மிதிக்குள்ளாக்கினார். இதே போல் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‘வலிமை’ படத்தின் பாடல்களுள் ஒன்று நிச்சயம் அம்மா செண்டிமெண்ட் பாடல் என்று தெரிவித்திருந்தார்.
இப்படி ‘வலிமை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிர்வு கிளப்பும் அப்டேட்டுகள் கிடைக்கத் தொடங்கியிருந்தாலும், ரசிகர்கள் இன்னும் வெறித்தனமாக பட வெளியீட்டுக்கு காத்திருக்கின்றனர். முன்னதாக அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள், தற்போது கோவிலில் அருள்வாக்கு சொல்லும் சாமியிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக வைரல் ஆகும் வீடியோவில், அருள்வாக்கு கொடுத்து திருநீறு தந்து அனைவரையும் ஆசீர்வதிக்கும் பூசாரியிடம், அருள் பெற்றுக்கொண்டு வலிமை அப்டேட் எப்ப வரும் என கேட்டுள்ளனர். இந்த வீடியோ தல ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.