“தல அஜித்தின் இந்த படத்தோட அடுத்த பார்ட் உடனே வரணும்!” .. ட்விட்டரில் தெறிக்கவிட்ட இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் பிஸியான இயக்குநர்களுள் ஒருவர்.
தொடர்ந்து பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு தான் தல அஜித்தின் ஒரு படத்தை குறிப்பிட்டு அந்த படத்தின் அடுத்த பாகத்தை உடனடியாக எடுக்கலாம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Thala Ajiths this movie can be sequel says venkat prabhu அஜித்

இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸை இயக்கி வெளியிட்டிருந்தார். காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரல் நடித்திருந்த இந்த படத்தில் வைபவ், பிரேம்ஜி, கயல் ஆனந்தி, ‘குக் வித் கோமாளி’ அஷ்வின் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Thala Ajiths this movie can be sequel says venkat prabhu அஜித்

இதனைத் தொடர்ந்து சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி நடித்துள்ள இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Thala Ajiths this movie can be sequel says venkat prabhu அஜித்

இந்த படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் உடனடியாக தொடர்வரிசை படமாக பண்ணப்பட வேண்டிய படம் எது? என்கிற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா என பதில் அளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், 2011-ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், வைபவ், பிரேம்ஜி, சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்த மங்காத்தா படம் அஜித்துக்கு முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இன்னும் 3 மாசம் இருக்கு.. இப்பவே இப்படியா?”.. சென்னையில் நிலநடுக்கம்... நேரடியாக உணர்ந்த டிவி நடிகைகளின் Viral பதிவு!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajiths this movie can be sequel says venkat prabhu அஜித்

People looking for online information on Ajith Kumar, Mankatha, Trending, Venkat Prabhu will find this news story useful.