முதன்முறையாக வலிமை திரைப்படத்தில் இருந்து தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை படப்பிடிப்பு குழுவும் உறுதி செய்தது. ஆனால் அது தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அஜித் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் இந்த புகைப்படத்தை யார் வெளியிட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த காட்சியின்போது தான் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் மறுநாளே அந்த காட்சியில் கலந்து கொண்டு நடித்து படப்பிடிப்பு குழுவை அஜித் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.