மருத்துவமனைக்கு வந்த தல அஜித் ? - வெளியான ஃபோட்டோ - எதற்காக இந்த விசிட் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கமாக தல அஜித் பொது நிகழ்வுகளில் பெரிதும் கலந்து கொள்வதில்லை. இதன் காரணமாக அவர் பற்றிய செய்திகள், அவரது புகைப்படங்கள் ஏதாவது ஒன்று வெளியானால் மின்னல் வேகத்தில் தல ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி விடுவர். 

Advertising
Advertising

அந்த வகையில் தல அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து 'எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ?' என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனையடுத்து எங்கள் தரப்பில் அந்த ஃபோட்டோ குறித்து விசாரிக்கையில் தல அஜித் தனது மனைவி ஷாலினியின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளாராம். இதுகுறித்து கவலைகொள்ள தேவையில்லை என்றும் பரிசோதனைக்கு பிறகு பாதுகாப்பாக இருவரும் வீடு திரும்பினர் என்பதும் தெளிவானது.

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைக்கு வந்த தல அஜித் ? - வெளியான ஃபோட்டோ - எதற்காக இந்த விசிட் ? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Thala Ajith's Hospital Visit pic goes Viral, details here | மருத்துவமனையில் இருக்கும் தல அஜித்தின் ஃபோட்டோ வைரல்

People looking for online information on Ajith Kumar, Shalini, Thala, Valimai will find this news story useful.