செம! 4 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய சாதனை படைத்த அஜித்தின் விவேகம்! என்ன சாதனை தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2017 ஆம் வருடம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீசான  விவேகம் திரைப்படம் தமிழில் மட்டும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும் தமிழகத்தில் 800 திரையரங்குகளில் வெளியானது.

தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கன்னடம் மற்றும் இந்தியில் இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இரண்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்கிலும், தொலைகாட்சியிலும் ஹிட்டானது. கன்னடத்தில் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக்காக விவேகம் (கமாண்டோ) படமும் சூப்பர் ஹிட் ஆனது.

குறிப்பாக இந்தியில் நான்காவது முறையாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இந்த விவேகம் திரைப்படம் தற்போது 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  ஏற்கனவே மூன்று முறை பதிவேற்றப்பட்டு 20 கோடி பார்வையாளர்களை 2018 ஆம் ஆண்டு கடந்தது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 30 கோடி பார்வையாளர்களை இந்தி டப்பிங் விவேகம் திரைப்படம் பெற்றுள்ளது.

செம! 4 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய சாதனை படைத்த அஜித்தின் விவேகம்! என்ன சாதனை தெரியுமா? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala ajithkumar vivegam movie super hit status

People looking for online information on Ajith Kumar, Siruthai Siva, Vivegam will find this news story useful.