கொரோனா வைரஸ் - களத்துல இறங்குகிறாரா தல அஜித் ? - அதிகாரப்பூர்வ தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகெங்கும்  அதிவேகமாக பரவிய கொரோனா வைரஸ் குறுகிய காலத்தில் கோர தாண்டவம் ஆடிவிட்டது. இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து மடிந்ததை அடுத்து அந்த நிலையை தவிர்க்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் Quarantine உள்ளிருப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், தெருக்கள், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் உறைவிடத்தில் பத்திரமாக தஞ்சமடைந்து உள்ளனர். அங்கங்கே நடமாடும் மனிதர்களை போலீசார் வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். உள்ளிருப்பு கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா கிருமிகளை ஒழிக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக கலாம் ஏர் ஸ்பேஸ் இஞ்சினியரிங் இன்ஸ்ட்யூட்டின் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் ’தக்‌ஷா’ ட்ரோன் கோயம்பேடு பகுதி மீது பறந்து கிருமி நாசினி தெளித்தது. பிஹைண்ட்வுட்ஸ் ஏர் டீம் சார்பில் இவரை பேட்டிகண்டபோது அவர் அந்த ட்ரோன்கள் செயல்படும் விதத்தையும், மேற்கொள்ளப்பட்டு வரும் பல நோய் தடுப்பு முயற்சிகளையும் விரிவாக விளக்கினார்.

தல அஜித் பற்றி குறிப்பிட்ட அவர், அஜித் தக்‌ஷா டீமின் குழு உறுப்பினராக இருந்ததாகவும், கொரோனாவை ஒழிக்க அவர் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் அழைப்போம் என்றும் தெரிவித்தார். கொரோனாவால் திரைப்பட படப்பிடிப்புகளும், போக்குவரத்தும்  கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் - களத்துல இறங்குகிறாரா தல அஜித் ? - அதிகாரப்பூர்வ தகவல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Thala will Ajith Help battling CoronoVirus Daksha Drone Sanitation Teem | கொரோனாவைரசை எதிர்க்க தல அஜித் களத்தில் இறங்குவார் தக்‌ஷா ட்ரோன்

People looking for online information on Ajith Kumar will find this news story useful.