LATEST: மற்றுமொரு சாதனை படைத்த தல அஜித்தின் "விஸ்வாசம்" திரைப்படம்! என்ன சாதனை தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - இயக்குனர் சிவா கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்தனர். சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 

ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையில் கவிஞர்கள் தாமரை, விவேகா, யுக பாரதி, அருண் பாரதி பாடல்களை எழுதினர். 14 இசைக்கோர்வைகளை கொண்டதாக விஸ்வாசம் படத்தின் ஆல்பம் அமைந்தது.  

2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் திரைப்படம், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்த திரைப்படமாக தமிழகத்தில் விஸ்வாசம் அமைந்தது. உலகெங்கிலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருதையும் இசையமைப்பாளர் டி. இமானுக்கு பெற்றுத்தந்தது. 

இந்நிலையில் விஸ்வாசம் படம் யூடியூப்பில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்தி உள்ளது. விஸ்வாசம் படத்தின் வீடியோக்கள் மற்றும் பாடல் வரி வீடியோக்கள் மட்டும் 760 மில்லியன் பார்வையாளர்களை தற்போது கடந்துள்ளது. குறிப்பாக அடிச்சு தூக்கு பாடலின் வீடியோ 100 மில்லியன் (Organic Views) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனை படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala ajith viswasam movie unstoppable youtube records

People looking for online information on Ajith Kumar, D Imman, Siruthai Siva, Viswasam Tamil will find this news story useful.