தல அஜித்தின் வலிமை.. அடேங்கப்பா!! ரிலீஸ்க்கு முன்பே இப்படி ஒரு சாதனையா? கொல மாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தல’ அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'.

போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி பேனரின் கீழ் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது திரைப்படமான ‘வலிமை’ திரைப்படம் பற்றிய அப்டேட்டுகளுக்காக தான் ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கின்றனர்.

ALSO READ: போடு வெடிய!! ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த"... வெளியான ரிலீஸ் தேதி & ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இந்த படத்தின் பாடலை பற்றி க்ளப் ஹவுஸில் பேசியிருந்த யுவன் ஷங்கர் ராஜா, இந்த படத்தில் ஒரு தாய்-சென்டிமென்ட் பாடல் இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் வலிமை படம் பற்றிய பிரம்மாண்ட அப்டேட்  தெரியவந்துள்ளது. அதன்படி தற்போது, ​​புக் மை ஷோவில் (ஆன்லைன் மூவி டிக்கெட் தளம்) 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் வலிமை படம் காண ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட பெரிய அப்டேட்டுகள் வரும் முன்னரே, இப்படி 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மிகப் பெரிய சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படமாக வலிமை மாறியிருக்கிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இன்னும் வெறித்தனமாக வலிமை படத்துக்கான அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர்.

ALSO READ: இது 'சிம்பு' சமைக்கும் 'டக்கரு' சமையல்!.. "தாடி எடுத்தப்றம் தான் முகமே தெரியுது!".. Trending வீடியோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith Valimai sets new National record before release

People looking for online information on Ajith Kumar, Trending, Vijya Television will find this news story useful.