வலிமை டீசர் UPDATE: தல கவுண்டவுன் இப்போ ஸ்டார்ட்டு! வலிமை டீசர் எப்போ வருது? வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. 

இந்நிலையில் வலிமை (Valimai) படத்தின் மிக முக்கிய அடுத்த அப்டேட்டான படத்தின் டீசர் வெளியாகும் அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. தல அஜித்திற்கு வியாழக்கிழமை மிகவும் பிடித்த நாள் என்பதால் வரும் வியாழக்கிழமை (23.09.2021) வெளியாகவும் வாய்ப்புள்ளது. விஸ்வாசம் படத்தின் முதல் லுக் போஸ்டரும் 23 ஆம் தேதி வியாழக்கிழமையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் போனிகபூர் சனிக்கிழமை பிரியர் என்பதால் சனிக்கிழமை (25.09.2021) கூட டீசர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எது எப்படி இருப்பினும் அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

THALA AJITH Valimai Movie MASS Teaser Release Update

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.