RECORD BREAKING: முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த வலிமை GLIMPSE! வேற லெவல்னா இதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - எச். வினோத் - போனிகபூர் - யுவன் - நிரவ் ஷா முதன்முறையாக இணைந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சுமார் 181 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது.

பின்னர் இதே கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது. 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி நேற்று மாலை வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் வகிக்கிறது. மேலும் 8 லட்சம் லைக்குகளை பெற்று பவன் கல்யானின் பீம்லா நாயக் முன்னோட்டத்தின் சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றுள்ளது.

இதற்கு முன் படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

 

RECORD BREAKING: முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த வலிமை GLIMPSE! வேற லெவல்னா இதான்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thala ajith valimai glimpse record breaking strike

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.