TRENDING: தல அஜித் என்னை நம்பினார்!.. 'வலிமை' வில்லன் வாய்ப்பு! மனம் திறந்த முன்னணி தமிழ் ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், Glimpse அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

வலிமை படம் 2022 பொங்கலுக்கு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக கார்த்திக்கேயா நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் செய்துள்ளார்.

அதில் "எனது பேரன்பிற்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்து வலிமை படத்தில் வில்லனாக நடிக்க பரிந்துரைத்தார் என்பதை கேட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். 'வலிமை' வில்லன் வாய்ப்பு கை நழுவி போனதில் ஏமாற்றம் தான் என்றாலும் கூட நல்ல விஷயங்கள் வரும் காலங்களில் என்னை வந்து சேரும் என்று நம்புகிறேன்". என பிரசன்னா தெரிவித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு வலிமை படம் சம்பந்தப்பட்ட ஆரம்பகட்ட பணிகளில் வில்லனாக பிரசன்னாவின் பெயர் அடிபட்டது. பின் ஒரு அறிக்கையை பிரசன்னா வெளியிட்டு படத்தில் தான் நடிக்கவில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

THALA AJITH TRUSTED IN ME FAMOUS ACTOR VIRAL STATEMENT

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Prasanna will find this news story useful.