அண்மையில் தல அஜித் சைக்கிளில் ரெய்டு போகும் புகைப்படங்களும், அஜித் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கு சென்றபோது ரசிகர்கள் சூழ்ந்த வீடியோக்களும் வைரலாகி வந்தன. இந்த நிலையில் அஜித் ஆட்டோவில் பயணிப்பதாகக் கூறி இன்னொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மைக்காலமாக வலிமை தொடர்பான அப்டேட்டுகளை அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பரவியதை அடுத்து ஒருபக்கம் போனி கபூர், வரும் மே 1-ஆம் தேதியான அஜித்தின் பிறந்த நாள் முதல் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான பணிகள் தொடர்பான அப்டேட்டுகள் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் அஜித் போன்ற தோற்றமுடைய ஒருவர் ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அஜித் மாதிரி தெரியும் ஒருவர் தலைமுடியுடனும் முகக்கவசம் அணிந்தும் பயணிக்கிறார். அந்த ஆட்டோ டிரைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்.
எனவே கொரோனா நிலவும் இப்போதைய வேளையில் எடுக்கப்பட்ட வீடியோ தான் என்றாலும், இப்போது தல அஜித் இந்த தோற்றத்தில் இல்லை என்பதை சமீப புகைப்படங்களில் காண முடிந்தது. இதனிடையே அஜித்தின் நெருக்கமான வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது ஆட்டோவில் பயணித்தது உண்மையில் தல அஜித் இல்லை என்று நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.