இது தான் தல அஜித் வைத்திருக்கும் BIKE ஆ? வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருந்து வலிமை படத்தின் மேலும் ஒரு அப்டேட்டை பெற தல அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் தல அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன.

தல அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  R 1250 GS Adventure பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் பயணம் மேற்க்கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்த BMW R 1250 GS பைக்கின் விலை இந்திய மதிப்பில் சுமார் 22.40 லட்சம் ஆகும். இதன் எரிபொருள் பெட்ரோல் கொள்ளளவு - 30 லிட்டர் ஆகும். 268 கிலோ எடை உடைய இந்த பைக் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

 

அஜித் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு தனது BMW S1000 RR பைக் மூலம் புனேயில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்திலும் பைக் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.  படத்தின் போஸ்டர்களில் அஜித் பைக்குடன் தோன்றுவது போன்ற போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

வலிமை படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கனவே வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது தான் தல அஜித் வைத்திருக்கும் BIKE ஆ? வைரலாகும் புகைப்படங்கள்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala ajith new bike stills went viral on social media

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Nirav shah, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.