மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நடிகர் மோகன்லால் லாலேட்டன் என தனது ரசிகர்களால் பேரன்போடு அழைக்கப்படுபவர்.
![thala ajith movie director reunite with mohanlal mass update thala ajith movie director reunite with mohanlal mass update](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thala-ajith-movie-director-reunite-with-mohanlal-mass-update-new-home-mob-index-2.jpg)
சமீபத்தில் மோகன்லாலை வைத்து ஜீத்து ஜோசப் '12th Man' படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அணில் ஜான்சன் பின்னணி இசையில் இந்த படம் உருவாகிறது. ஆகஸ்டில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடந்தது. முன்னதாக நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘ப்ரோ டாடி’ படத்தில் தனது பகுதிகளை மோகன்லால் நடித்து முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதனால் மோகன்லால் தனது அடுத்த படத்தை தல அஜீத்தை வைத்து ஜனா படத்தை இயக்கிய இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, இந்த படத்திற்கு ராஜேஷ் ஜெயராம் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இயக்குனர் ஷாஜி கைலாஸ் முன்னிலையில் மோகன்லால் 'அலோன்' என்ற பெயரை அறிவித்தார். உண்மையான ஹீரோ வாழ்க்கையில் தனியாக இருக்கிறார் என்று சப் டைட்டிலையும் நடிகர் மோகன்லால் அறிவித்தார். 12 வருட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் மற்றும் ஷாஜி கைலாஸ் இணைந்துள்ளனர். 2009ல் வெளியான ரெட் சில்லிஸ் படமே மோகன்லால்- ஷாஜி கைலாஸ் கூட்டணியில் வந்த கடைசி படமாகும்.
ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராஜேஷ் ஜெயராம் வசனம் எழுதுகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக் பிஜோய் இசையமைக்கிறார்.