உலகெங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்ட நடிகர் தல அஜித். பல பிரபலங்களுக்கும் இவர் பேவரைட் ஹீரோ என்பது மறுக்க முடியாத உண்மை. தன் ரசிகர்களை மிகவும் மதிக்கும் அவர், பல நேரங்களில் ரியல் லைப்பிலும் அவர்களின் மனம் கவர்ந்த மனிதராக விளங்குகிறார். இந்நிலையில் வரும் மே 1-ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், பல பிரபலங்களும் 'தல' அஜித் எக்ஸ்குளுசிவ் DP-யை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
