தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது.
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு முன் படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் வலிமை (Valimai) படத்தின் மிக முக்கிய அடுத்த அப்டேட்டான படத்தின் முன்னோட்டம் இந்த வாரம் வெளியாகும் என தகவலை சொல்லி இருந்தோம். குறிப்பாக வியாழக்கிழமை என்றும் கூறியிருந்தோம். அதன்படி வலிமை படத்தின் முன்னோட்ட வீடியோ Glimpse) தல அஜித்திற்கு உகந்த வியாழக்கிழமையான இன்று (23.09.2021) மாலை 6.03 மணிக்கு வெளியானது. இதனை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் டிவிட்டரில் வெளியிட்டார்.
முன்னோட்ட வீடியோவில் தல அஜித் - கார்த்திகேயா பேசும் வசனமும், நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜா இசையும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி உள்ளன. ஏற்கனவே வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணளவுக்கு உள்ளது. அதை இந்த முன்னோட்டம் மேலும் எகிர வைத்துள்ளது. சட்டவிரோத பைக் ரேஸ் பற்றி இந்த படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்தின் தோற்றத்தை இயக்குனர் எச். வினோத் வியக்க தக்க அளவுக்கு மாற்றியுள்ளது முன்னோட்ட வீடியோவில் தெரிகிறது.