தமிழ் சினிமாவின் இருவேறு துருவங்களாக உயர்ந்து நிற்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். இருவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டர்கள் திருவிழா கோலமாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தல அஜித் தனது பில்லா படத்தின் போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
