தல அஜித் நடித்த 'வலிமை' படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்.

இதன் பின்னர் ரசிகர்களிடையே ‘வலிமை’ படம் தொடர்பான உற்சாகமும் உரையாடலும் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டர் யூடியூபில் சுமார் பத்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது.
இதைக் கொண்டாடும் வகையில், பேவியூ புராஜக்ட்ஸ் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பைக்குடன் ‘தல’அஜித் நீல நிற பைக்கர் ஆடையில், சாலையில் ஸ்டைலாக நிற்கும் போஸ்டரை பகிர்ந்துள்ளது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் இன்னும் குஷி ஆகிவிட்டனர்.
போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி தயாரிப்பில், 2019-ல் வெளிவந்த கோர்ட் டிராமாவான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் தல அஜித்தை H.வினோத் இயக்கியதைத் தொடர்ந்து, தல அஜித்துடன் H.வினோத் கைகோர்க்கும் இரண்டாவது திரைப்படம்‘வலிமை’.
இந்த படத்தில் ஹூமா குரேஷி, பெர்ல் மானே, யோகி பாபு மற்றும் கார்த்திகேயா கும்மகொண்டா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.