தல தீபாவளி! குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய தல அஜித்! வைரலாகும் புத்தம் புதிய புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

THALA AJITH AND SHALINI AJITH CELEBRATED DIWALI PHOTO WENT VIRAL
Advertising
>
Advertising

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

THALA AJITH AND SHALINI AJITH CELEBRATED DIWALI PHOTO WENT VIRAL

இந்நிலையில், தல அஜித் தற்போது வட இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தல அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. மேலும் தல அஜித் தனது குடும்பத்துடன் ஜெய்பூரில் நாட்களை செலவிட்டார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வைரலானது. 

அதனைத்தொடர்ந்து, தற்போது தல அஜித் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபின் வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் (Border Security Force) எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின. இந்நிலையில் தல அஜித் தீபாவளி கொண்டாடும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இந்தபுகைப்படத்தில் தல அஜித் வேட்டி சட்டையுடன் மனைவி ஷாலினியுடன் உள்ளார். இவர்களுடன் நடன கலைஞர் ஜின் கிரண் உள்ளார்.

இது குறித்து கிரண் கூறும் போது " சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த தீபாவளி !என்னை தீபாவளி பாஷில் கலந்து கொண்டதற்கு நன்றி அஜித் சார் & ஷாலினி மேடம். உங்கள் கருணை, அன்பு மற்றும் எளிமை ஆகியவற்றால் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஆழ்ந்த கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையில் ஒரு பெரிய பாக்கியம்.-என ஜின் கிரண் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

THALA AJITH AND SHALINI AJITH CELEBRATED DIWALI PHOTO WENT VIRAL

People looking for online information on Ajith Kumar, Diwali, Shalini Ajith, Thala Deepavali will find this news story useful.