தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம்.. மைல்கல் சாதனை படைத்த தாய்க் கிழவி பாடல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கடைசில அவன் சொன்னது மாதிரியே நடந்துடுச்சு".. மயில்சாமி பற்றி உருக்கமாக பேசிய தாமு..!

இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முறையே முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூழ்நிலை பாடல்களாகவும் ஹிட் பாடல்களாகவும அமைந்தன. தனுஷ் மற்றும் நித்யா மேனனின் இயல்பான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

தேன்மொழி, மயக்கமா குழப்பமா, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, தாய்க் கிழவி ஆகிய பாடல்கள் படத்தில் அமைந்தன. இதில் தாய்க் கிழவி பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியா துவங்கி, வாட்சப் ஸ்டேட்டஸ் என தேன்மொழி பாடல் தொடர்ந்து ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில், தாய்க் கிழவி பாடலை யூடியூப் பக்கத்தில் 100 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். படம் வெளியாகி 5 மாதங்களுக்கு மேலாகிய நிலையில் இன்னும் இப்படத்தில் இடம்பெற்ற தாய்க் கிழவி பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் தொடர்ந்து வரவேற்பையும் பெற்று வருகிறது.

Also Read | தெலுங்கில் வெளியான நடிகர் தனுஷின் SIR (வாத்தி).. 3 நாள் SHARE இவ்வளவா?.. வெளியான மாஸ் தகவல்..!

தொடர்புடைய இணைப்புகள்

Thaai Kelavi song reached 100 million views in Youtube

People looking for online information on Dhanush, Thaai Kelavi song, Thiruchitrambalam will find this news story useful.