பிரித்விராஜ் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமான 'கப்பா' வை இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர் வேணு ISC இயக்குகிறார்.
திருவனந்தபுரம் நகரத்தில் கண்ணுக்கு தெரியாத பாதாள உலகின் கதையைச் சொல்லி, ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய 'ஷங்குமுகி' நாவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் திரைக்கதையை இந்துகோபன் அவர்களே அமைத்துள்ளார். இந்த படத்தில் பிரித்விராஜின் கதாபாத்திரம் கோட்டா மது என்று அழைக்கப்படுகிறது.
மஞ்சு வாரியர், அன்னா பென், இந்திரன்ஸ் மற்றும் நந்து உட்பட சுமார் 60 நடிகர்கள் நடிக்கிறார்கள். FEFKA எழுத்தாளர் சங்கத்தால் தயாரிக்கப்படும் முதல் திரைப்பட தயாரிப்பு கப்பா ஆகும். FEFKA எழுத்தாளர் சங்கம், அதன் உறுப்பினர்களின் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக, டோல்வின் குரியகோஸ், ஜிஎன்வி ஆபிரகாம் மற்றும் திலீஷ் நாயர் ஆகியோரின் கூட்டு நிறுவனமான தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தொடங்குகிறது.
ஒளிப்பதிவாளராக சானு ஜான் வர்கீஸ், எடிட்டராக மகேஷ் நாராயணன், இசையமைப்பாளராக ஜஸ்டின் வர்கீஸ், கலை இயக்குனராக திலீப் நாத், ஆடை வடிவமைப்பாளராக சமீரா சனீஷ், ஒப்பனைக்கு ரோனக்ஸ் சேவியர், ஸ்டில்ஸ்க்கு ஹரிதிருமாலா ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் இயக்குனர் வேணு ISC பகிர்ந்துள்ளார். மோஷன் போஸ்டரில் இருந்த சிவப்பு நிறம் இல்லாமல் இரண்டாவது லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. திருவனந்தபுரத்தினை கழுகு பார்வையில் போஸ்டர் பதிவு செய்கிறது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர், நேற்று மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.