"டென்ஷனா இருக்கு பேபி!"... விஜய் சேதுபதி - தமன்னாவின் MASTER CHEF புதிய ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக இருந்து வருபவர்.

tension baby Vijay Sethupathi Tamannaah MASTER CHEF New Promo

இவர் தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாக உள்ள பிரபல சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். மாஸ்டர் செஃப் தமிழ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சமையல் நிகழ்ச்சியில் தமிழ் வெர்ஷனை விஜய் சேதுபதியும் தெலுங்கு வெர்ஷனை தமன்னாவும் தொகுத்து வழங்கவிருக்கின்றனர்.

tension baby Vijay Sethupathi Tamannaah MASTER CHEF New Promo

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்கள் அவ்வப்போது விஜய் சேதுபதி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி வந்தன. முன்னதாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்களில் இது ‘நம்ம மக்கள் சமைக்கும் டக்கர் சமையல்’ என்று குறிப்பிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது கிடைத்த சிறிய இடைவெளியில் குழுவினருடன் இணைந்து குத்து டான்ஸ் போட்டார்.

tension baby Vijay Sethupathi Tamannaah MASTER CHEF New Promo

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய சிறப்பு விருந்தினர்களை விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தமன்னாவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது.

அந்த ப்ரோமோவில், ‘ஆர் யூ ஓகே பேபி’ என்று தமன்னா கேட்கிறார். அதற்கு பதில் சொன்ன விஜய்சேதுபதி, ‘கொஞ்சம் டென்ஷனா இருக்கு பேபி!’ என்று பதிலளிக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘லாபம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் வெளியீட்டை கைவசம் வைத்திருக்கிறார்.

இதனிடையே விஜய் சேதுபதி நடித்த ‘நவரசா’ திரைப்படம் வரும் ஆகஸ்டு 6-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. 9 இயக்குநர்கள் இணைந்து உருவாக்கிய இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் சூர்யா, சித்தார்த், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்கின்றனர். மணிரத்னம் & ஜெயேந்திர பஞ்சாபிகேசன் இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.

"டென்ஷனா இருக்கு பேபி!"... விஜய் சேதுபதி - தமன்னாவின் MASTER CHEF புதிய ப்ரோமோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tension baby Vijay Sethupathi Tamannaah MASTER CHEF New Promo

People looking for online information on MasterChef, MasterChefTamil, Tamannaah, Vijay Sethupathi will find this news story useful.