பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தெலுங்கு திரை உலகம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரை உலகில் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுதீர் வர்மா.

Advertising
>
Advertising

Also Read | வெளியேறும் முன்பு, விக்ரமனுக்காக அம்பேத்கரின் பொன்மொழியை பேசி Bigg Boss நெகிழ்ச்சி..!

தெலுங்கு சினிமாவில் இளம் நாயகனாக வலம் வந்த சுதீர், குண்டனபு பொம்மா உள்ளிட்ட படத்திலும், செகண்ட் ஹேண்ட், Shootout at Alair உள்ளிட்ட படைப்புகளிலும் அவர் நடித்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது விபரீத முடிவை எடுத்து சுதீர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது ஒட்டுமொத்த தெலுங்கு திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விசாகப்பட்டினத்தில் தனது வீட்டில் வைத்து வைத்து விபரீத முடிவை சுதீர் வர்மா எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது பற்றி, சுதீருடன் இணைந்து நடித்துள்ள நடிகர் உள்ளிட்ட பலரும் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடம் சென்ற போலீசார், சுதீர் வர்மாவின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையின் படி வெளியான தகவலில், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சுதீர் வர்மா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், சுதீரின் முடிவுக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதீருடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சுதாகர், அவரது புகைப்படத்தை பகிர்ந்து, இந்த முடிவு தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் இதனை ஜீரணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, இன்னும் பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் சுதீர் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | "இத்தனை போராட்டத்துக்கப்புறம்".. அண்ணன் விக்ரமன் பற்றி தங்கை.. "ஒவ்வொரு பாய்ண்ட்டுக்கும் Applause"

Telugu young actor sudheer varma passed away

People looking for online information on Sudheer Varma, Sudheer varma passed away, Telugu young actor will find this news story useful.