வடகிழக்கு பருவமழையால் ஆந்திர பிரதேசத்தின் முக்கிய மாவட்டங்களான நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட சற்று அதிகமான மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்து, பெருத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு 40க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளத்துக்கு தெலுங்கு நடிகர்களான மகேஷ்பாபு, சிரஞ்சீவி, ஜூனியர் NTR தலா 25 லடம் ரூபாய் அளிப்பதாக ஆந்திர முதல்வருக்கு டிவிட்டர் வழியாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மகேஷ்பாபு டிவிட்டரில் "ஆந்திராவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சத்தை வழங்குகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஆந்திரா அரசுக்கு உதவ அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து Jr NTR டிவிட்டரில் ,"ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை கண்டு மனமுடைந்துவிட்டதாகவும், மக்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ரூ. 25 இலட்சத்தை வழங்குகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிரஞ்சீவி டிவிட்டரில், "ஆந்திராவில் கனமழையால் ஏற்பட்ட சேதம் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது. நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சத்தை வழங்குகிறேன்.என குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ்பாபு நடிப்பில் சர்காரு வாரிபட்டா படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது, Jr NTR நடிப்பில் RRR வரும் ஜனவரி 7ல் வெளியாக உள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா படம் பிப்ரவரி 4ல் வெளியாக உள்ளது.