தேள் கடிக்கு ஆளான பிரபல தெலுங்கு நடிகை... படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கானா: பிரபல தெலுங்கு நடிகை ஹீனா தேள் கடிக்கு உள்ளாகியுள்ளார்.

Advertising
>
Advertising

தெலுங்கு நடிகை ஹீனா, காலா இசை வீடியோவுக்காக தெலுங்கானா காடுகளில்  படப்பிடிப்பில் இருக்கும் போது தேள் கடிக்கு உள்ளானார். ஆனால்  உடனடியாக சிகிச்சை அளித்து நடிகைக்கு விஷம் ஏறாமல் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஹீனா கூறியதாவது, "படப்பிடிப்பின் போது காட்டில் பாம்புகள் இருந்தன, அவற்றைத் தவிர்க்க முயன்றேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேள் கடித்துவிட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு திரும்பியதும், தயாரிப்பாளர்கள் எனக்கு ஓய்வு கொடுக்க விரும்பினர், ஆனால் நான் படப்பிடிப்பை தொடர விரும்பினேன் என்று நடிகை சிரிக்கிறார். ஹீனா சல்மான் கானின் தீவிர ரசிகை,  எனக்கு தேள் கடித்ததும், எனக்குப் பிடித்த நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்ததும் தான்,” இருவருக்கும் ஒரே வித்தியாசம் என்று கூறியுள்ளார்.

“வாழ்க்கையின் பயணம் என்பது கனவு காண்பது மற்றும் அந்த கனவை அடைய ஏதாவது செய்வது. வாழ்க்கையை விட பெரிய ஒன்றை கற்பனை செய்யும் திறன் வாழ்க்கையின் சாரத்தை உருவாக்குகிறது. ‘காலா’ பலரின் கனவை சித்தரிக்கும் ஒரு இசை முயற்சி,” என்று தெலுங்கில் காலா என்ற தனது கனவு இசை வீடியோவைப் பற்றி சேசு கேஎம்ஆர் கூறுகிறார். சேசு, ட்விட்டரில் இசை வீடியோவை வெளியிட்ட அவரது வழிகாட்டியான ராம் கோபால் வர்மா உட்பட பல திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

‘காலா’  மியூசிக்கல் வீடியோ , கோவா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அழகிய இடங்களில் ஒளிப்பதிவாளர் பார்கவ் ரவாடாவால் படமாக்கப்பட்டது. அழகான நடிகை ஹீனா எஸ் இடம்பெறும் இந்த பாடலை நன்கு அறியப்பட்ட பாடகி நேஹா கரோட் பாடியுள்ளார். கேஎம்ஆர் கார்ப்பிரசன்டேஷன் மற்றும் பிளேபேக் என்டர்டெயின்மென்ட் புரொடக்ஷன் தயாரிக்க, கேவி சித்தார்த்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார். சேஷு கேஎம்ஆ இசை அமைக்க, எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை சூர்யா ரெட்டி எஸ்எஸ் செய்துள்ளார், ராஜ் குமார் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Telugu Actress Heena Was Bitten By A Scorpion Full Details

People looking for online information on Heena, Kala Music Video, Ram Gopal Varma will find this news story useful.