விஷால் & SJ சூர்யா நடிப்பில் உருவாகிவரும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. நடிகர் விஷாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு 5 மொழிகளிலும் போஸ்டரை வெளியிட்டது. மீசை மற்றும் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் விஷால் இருக்கும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
மேலும், இந்த படத்தில் நடிகை ரீது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் & எஸ்.ஜே. சூர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார் என மிரட்டலான லுக் போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சுனில், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்', கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்'ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் மங்களம் சீனு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சுனில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.