8 நாள் டப்பிங்! தொண்டை எல்லாம் ஒரே வலி! வைரலாகும் மாநாடு பிரபலத்தின் டிவீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

tell U all one thing DIWALI NOV 25TH THANDA Maanaadu
Advertising
>
Advertising

இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்புவை வைத்து இந்த 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டைம் லூப் பாணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது.

tell U all one thing DIWALI NOV 25TH THANDA Maanaadu

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் படத்தின் டப்பிங் பணியை படக்குழு துவங்கி உள்ளதாகவும், நடிகர் S J சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார் என சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தன. தற்போது படத்தில் நடித்துள்ள நடிகர் S J சூர்யா தனது காட்சிகள் சம்பந்தப்பட்ட டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

அதில் நாடி, நரம்பு, தொண்டை, கழுத்து, முதுகு எல்லாம் வலிப்பதாகவும், 8 நாட்கள் டப்பிங் பேசி முடித்துள்ளதாகவும், இந்த வலி போக 10 நாள் ஓய்வு தேவைப்படுவதாகவும், உண்மையான தீபாவளி நவம்பர் 25 அன்று தான் என குறிப்பிட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tell U all one thing DIWALI NOV 25TH THANDA Maanaadu

People looking for online information on S J Suriyah, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.