உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து துறைகளும் முடங்கியிருக்கின்றன. சினிமா துறையும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புகளும் கடந்த மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி துறையினர் தமிழக அரசுக்கு வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தமிழக அரசு சீரியல் படப்பிடிப்புகளுக்குக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை படப்பிடிப்புகள் வீடுகள் மற்றும் ஸ்டூடியோக்களில் மட்டுமே நடத்த வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், கூட்டமாக நிற்கக்கூடாது, இடைவேளை விட்டு தான் நின்று நடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி கழுவுவது உறுதி செய்ய வேண்டும், வெளிப்புற ஷாட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அங்கேயும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். படப்பிடிப்பு தளங்கள் மற்றும் வாகனங்களில் அடிக்கடி கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
இத்தகைய கட்டுப்பாடுகளை உறுதி செய்தால் மட்டுமே அனுமதி நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து நடிகை ராதிகா அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.