சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி போயுள்ளன. இதில் சினிமாத்துறையும் அடங்கும். இதன் காரணமாக சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் அரசு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்தது.
இதனிடையே தற்போது தமிழக அரசு தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பை நடத்தி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேரை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சுஜாதா விஜயகுமார் மற்றும் செயலாளர் நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.