டெடி பாத்துட்டு ஃபீல் பண்ணிய பிக்பாஸ் பிரபலம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த மகளுடனான க்யூட் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா, சதீஷ், கருணாகரன் மற்றும் பலர் நடித்து டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் டெடி.

இந்த படத்தில் ஒரு காரணத்தினால் ஹீரோயினின் எனர்ஜி டெடிக்குள் வந்துவிடுகிறது. இதனை அடுத்து டெடியும் ஆர்யாவும் நண்பர்களாகி விடுகின்றனர். இந்த படத்தில் டி.இமானின் இசையில் அனிருத் பாடிய நண்பியே பாடல் டெடி பியருக்கும் ஆர்யாவுக்குமான நட்பை சொல்லும் பாடலாக வந்திருக்கும்.

இதேபோல் பிரபலமான டெடி பியர் ரைம்ஸ் பாடலும், இந்த படத்தில் வரும் சேட்டையும் சுட்டித்தனமும் மிகுந்த குறும்புக்கார டெடிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கும். இந்த பாடல்க்கு தன் மகளுடனான தமது க்யூட்டான தருணங்கள் அடங்கி பழைய வீடியோவை எடுத்து தற்போது பகிர்ந்துள்ளார் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளருமான அர்ச்சனா.

இது தொடர்பான கேப்ஷனில். “என்னுடைய அழகிய நினைவுகளை ஃபீல் வைத்தது டெடி திரைப்படம். ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கேப்ஷனில் தமது மகள் ஸாரா வினீத்தையும் டேக் செய்துள்ளார்.

ALSO READ: TEDDY (TAMIL) MOVIE REVIEW டெடி திரை விமர்சனம்

தொடர்புடைய இணைப்புகள்

Teddy feel VJ Archana Viral Video with daughter டெடி அர்ச்சனா

People looking for online information on Archana, Arya, Teddy Tamil will find this news story useful.