போலீசாக KGF வில்லன் சஞ்சய் தத்.. திருடனாக ரன்பீர் கபூர்.. வெளியான மிரட்டல் டீஸர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷம்ஷேரா திரைப்படம் ரன்பீர் கபூர் மற்றும் சஞ்சய் தத்தின் நடிப்பில் அடுத்து வர இருக்கும் ஆக்‌ஷன் படம்.

Advertising
>
Advertising

Also Read | 'வாரிசு' படத்தின் தாறுமாறான மூன்றாவது லுக் போஸ்டர்.. விஜய் சும்மா தெறியா இருக்காரு!

கொள்ளையர்கள் மற்றும் காவல்துறையினரின் மோதலை அடிப்படையாகக் கொண்ட அதன் முதல் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. சஞ்சய் தத் ஒரு ஊழல் மிகுந்த மிருகத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரை எதிர்கொள்ளும் ஒரு கொள்ளையனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

கடந்த வாரம், இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது, அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் டீசரை வெளியிட்டுள்ளது. கதை அமைக்கப்பட்டுள்ள கற்பனையான நகரமான காசாவின் கழுகுப்பார்வையுடன் டீஸர் துவங்குகிறது.

வறண்ட பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ள காசா, குடிமக்கள் தண்ணீருக்காக அலைவதை சித்தரிக்கிறது, சஞ்சய் தத் ஒரு காட்டுமிராண்டித்தனமான போலீஸ்காரராக டீசரில் காட்சியளிக்கிறார்.

இப்படம் ஒரு பீரியட் ஆக்‌ஷன் டிராமா படமாக உருவாக்கப்பட்டுள்ளது, இதில் ரன்பீர் இரட்டை வேடத்தில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அசுதோஷ் ராணா, சௌரப் சுக்லா, ரோனித் ராய், வாணி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஷாம்ஷேராவின் கதை கற்பனையான நகரமான காசாவில் அமைக்கப்பட்டுள்ளது, ஷம்ஷேரா திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | பிரபல OTT-யில் 5 மொழிகளில் வெளியாகும் 'விக்ரம்' திரைப்படம்.. எப்போ ரிலிஸ்? சூப்பர் அப்டேட்

போலீசாக KGF வில்லன் சஞ்சய் தத்.. திருடனாக ரன்பீர் கபூர்.. வெளியான மிரட்டல் டீஸர்! எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Teaser of Ranbir Kapoor Sanjay Dutt starrer Shamshera movie

People looking for online information on Ranbir Kapoor, Sanjay Dutt, Shamshera movie, Shamshera movie Teaser will find this news story useful.