பிரபல OTT-க்கு அருண் விஜய் - வாணி போஜன் நடிக்கும் புதிய வெப்-சீரிஸ்.. வெளியான மிரட்டல் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

SonyLIV' தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

Advertising
>
Advertising

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' தமிழக ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி தயாரிப்பாளர்!

தமிழ் ராக்கர்ஸ் தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். சைபர் க்ரைம் திருட்டுக்கு எதிரான போரை இந்த நிகழ்ச்சி  வெளிப்படுத்துகிறது.

அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் அறிவழகன் கூறுகையில், “ஏவிஎம் புரடக்சன்ஸ் மற்றும் சோனிலிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சி. சோனிலிவ்  தளம் பார்வையாளர்கள் விரும்பும் வகையில், சிறந்த உள்நாட்டு  படைப்புகளை வெளியிட்டு வருகிறது, தமிழ் ராக்கர்ஸ் காவலதிகாரி ருத்ராவின் கதை. சைபர் க்ரைமின்  இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் இந்த தொடர் வெளிப்படுத்தும். இந்த தொடரில்  அருண் விஜய் நடித்தது பெருமையாக உள்ளது. சோனிலிவ் தளத்தில் விரைவில் இந்த தொடரை வெளியிட  ஆவலாக உள்ளேன்.

ஏவிஎம் புரடக்சன்ஸ்  தயாரிப்பாளர் அருணா குகன் கூறியதாவது…

தமிழ் ராக்கர்ஸ் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நெருக்கமான தொடராகும், ஏனெனில் எங்களின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது. மேலும் இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதிக்கிறது. அபர்ணாவும் நானும் சைபர் க்ரைம், பைரஸி  பொழுதுபோக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்டவும், அதை பற்றிய கதையை கூறுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தோம். திறமை மிகுந்த இயக்குநர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது. அருண் விஜய் சார் இத்தொடரில் நடித்தது இத்தொடருக்கு மிகப்பெரும் பலத்தை தந்ததுள்ளது. சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தொடர்களை, ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளை அளித்து வரும் சோனிலிவ் தளத்தில் எங்களது தமிழ் ராக்கர்ஸ் வெளியாவதை காண ஆவலோடு உள்ளோம்.

Also Read | OTT-யில் வெளியாகும் நானி - நஸ்ரியா நடித்த சூப்பர் ஹிட்டான 'அடடே சுந்தரா' திரைப்படம்.. எப்போ? எதுல?

பிரபல OTT-க்கு அருண் விஜய் - வாணி போஜன் நடிக்கும் புதிய வெப்-சீரிஸ்.. வெளியான மிரட்டல் டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Teaser of Arun Vijay Arivazhagan Tamil Rockerz

People looking for online information on Arivazhagan, Arun Vijay, Tamil Rockerz Web series will find this news story useful.