செம.. பட ரிலீஸை ஒட்டி RRR குழுவினர் போன புனித ஸ்தலம் எது தெரியுமா..? வைரல் ஃபோட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர் ஆர் ஆர் படம் இன்னும் நான்கு நாட்களில் இந்தியா முழுவதும் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் புனித தளங்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

அக்ஷரா ஹாசன் நடித்த புதிய தமிழ் படம்..நேரடியாக பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

பாகுபலிக்குப் பின் ஆர் ஆர் ஆர்

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.

எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் ”இரத்தம் ரணம் ரௌத்திரம்” என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது.

பேன் இந்தியா ரிலிஸ்

பாகுபலியின் வெற்றி இயக்குனர் ராஜமௌலியை இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க ஒரு இயக்குனராக ஆக்கியுள்ளது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலிஸாகிறது.  இந்த படத்துக்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம் 185 நிமிடங்கள் அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம். இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 மார்ச் 25 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.

படத்தின் வெற்றிக்காக…

ஆர் ஆர் ஆர் படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் உள்ள புனித தளங்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். தற்போது படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் கதைநாயகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகிய மூவரும் பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

இதுபோலவே முன்னர் சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலை இருக்கும் ‘statue of unity’ பகுதிக்கு அவர்கள் சென்றதும், அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவலாகக் கவனத்தைப் பெற்றன.

KGF2: “குறுக்க மட்டும் போயிடாதீங்க”… மாஸ் வரிகளில் அதகளம்- வெளியான TOOFAN பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Team RRR went to Amritsar golden temple for blessing

People looking for online information on Alia Bhatt, Amritsar golden temple, NT Rama Rao Jr, Ram Charan, RRR, S S Rajamouli, Shriya Saran will find this news story useful.