நடிகர் கமல்ஹாசன் & இயக்குனர் மணிரத்னம் சந்திப்பு நடந்துள்ளது.

Also Read | "எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும்".. சமந்தா நெகிழ்ச்சியான பதிவு!
நேற்று நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 35 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என வந்த அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் & மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பாளர்கள் குழுவில் RKFI மகேந்திரன் & மெட்ராஸ் டாக்கீஸ் சிவா ஆனந்த் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் & விக்ரம் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் மணிரத்னம் & கமல்ஹாசன் கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனை இயக்குனர் மணிரத்னம் சந்தித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம் & கமல்ஹாசனுடன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் உடன் உள்ளனர்.
Also Read | BREAKING: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை - 1.. ஷூட்டிங் அப்டேட்! பட ரிலீஸ் எப்போ?