வேறலெவல்.. சிக்ஸ் பேக் வைத்து மாஸ் காட்டும் நடிகை டாப்ஸி! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி.

Advertising
>
Advertising

தமிழில் ஆரம்பம், ஆடுகளம், வந்தான் வென்றான் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சமீபத்தில் நடிகை டாப்ஸி பன்னு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜிம் பயிற்சியாளரான சுஜீத் கர்குட்கருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை டாப்ஸி பதிவிட்டுள்ளார். புகைப்படங்களில் நடிகை கருப்பு ஜிம் உடை அணிந்து 6-பேக் உடற்கட்டில் தோன்றியுள்ளார். அந்த பதிவில் "பல மாதங்களாக கிரில்லிங் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே நான் பிஸ்கட் சாப்பிட முடியும். சுஜித்  டீ சாப்பிட முடியும். சுஜித் நீங்கள் இறுதியாக இந்த படத்தைப் பெற்றுள்ளீர்கள், நான் எனது சோலே பத்தூரையும் குரோசண்ட்ஸையும் சாப்பிடப் போகிறேன்". என டாப்ஸி பதிவிட்டுள்ளார்.

டாப்ஸி பன்னு கடைசியாக ZEE5 தளத்தில் வெளியாகிய திரைப்படமான Blrr இல் குல்ஷன் தேவையாவுடன் நடித்தார். தற்போது, நடிகர் ஷாருக்கானுடன் ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2023 டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Tapsee Panu Latest Look with Six Pack Viral Photos

People looking for online information on Tapsee pannu will find this news story useful.