கொரோனா குறித்த அச்சம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் ஜுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்க, ஒருசிலர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து வீட்டில் குவாரண்டைன் ஆகியுள்ளனர்.
அடுத்தடுத்து 144 போடப்பட்டு மக்கள் லாக்டவுனில் இருந்து வந்தாலும், கொரோனாவை விரட்ட முடியாத நிலைதான் நிலவி வருகிறது. மருத்துவர்கள், உள்ளிட்ட ஃப்ரண்ட்லைன் பணியாளர்கள் இந்த அசாதாரண சூழலில் மக்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
கொரோனாவால் மக்கள் பலவகையில் அவதியுற்று வரும் நிலையில், எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையான விஷயம், சிலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வாழ்வாதாரம் இன்றி தவித்தது. கடைசியில் வேறு வழியின்றி கால்நடையாகவும், சைக்கிளிலும் கிடைத்த வாகனங்களிலும் புறப்பட்டுச் சென்ற காட்சியைப் பார்த்த அனைவரையும் நிலைகுலைய வைத்தது.
திரள் திரளாக மக்கள் எப்பாடுபட்டாவது தங்கள் ஊருக்கு போய்விடவேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணித்தார்கள். அவர்கள் அனுபவித்த கொடுமைகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எத்தனை காணொளியில் போட்டுக் காட்டினாலும் அந்த துயரை முழுவதும் உணர்ந்திட முடியாது.
சமீபத்தில் நடிகை டாப்ஸி பன்னு தனது சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதை அவர் ப்ராவஸி என்ற கேப்ஷனுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருர்ந்தார். ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், சொந்த ஊர் நோக்கி பயணித்த போது அவர்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளையும் தொகுப்பாக்கி கார்டூனாக வெளியிட்டுள்ளனர். அதில் ஹிந்தியின் ஒலித்த வரிகளின் சாரம் - ‘’தலைவர்கள் பொய் பிரச்சாரத்தால், பேருந்துகள் அனுப்பினர், ரயில்கள் விட்டனர், ஏனோ அவை ஏழைகள் போகும் வழி மறந்தன, உயிர்களை இழந்தோம், இங்கு சிலைகள் மதிப்பு மிக்கவை, மனித உயிர்கள் மலிவானவை...’
இதை மேற்கோளாக்கி ‘பிரவாஸி’ என்ற கேப்ஷனுடன் டாப்ஸி அதை உருக்கமாக பதிவிட்டார். அதில் அவர் குறிப்பிட்டது, ‘இந்தக் காட்சிகள் நம் மனதை விட்டு வெளியேறாது. இந்த வரிகள் நீண்ட காலமாக நம் தலைக்குள் எதிரொலிக்கும்=. இந்த கொரோனா தொற்றுநோய் இந்தியாவுக்கு ஒரு வைரஸ் தொற்றுநோய் என்பதையும் தாண்டி மிக மோசமானது
’.